தொடர்புடைய செய்திகள்
- அமைச்சர் பொன்முடி வீட்டுக்கு வங்கி அதிகாரிகள் வருகை: பணப் பரிவர்த்தனை குறித்து விசாரணையா?
- போலி சாவி தயாரித்து பீரோவை திறந்தார்களா அமலாக்கத்துறை அதிகாரிகள்.. பொன்முடி வீட்டில் பரபரப்பு..!
- அமலாக்கத்துறை சோதனை பற்றி திமுக கிஞ்சித்தும் கவலைப்படவில்லை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- கட்சிகளை உடைத்து அனைவரையும் பாஜக பயமுறுத்த முயற்சிக்கிறது.- முதல்வர் கெஜ்ரிவால் கண்டனம்
- ’அப்படியா.. எனக்கு தெரியாது’: பொன்முடி வீட்டின் சோதனை குறித்து துரைமுருகன் பதில்..!
அமைச்சர் பொன்முடி இல்லத்தில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு கரன்சி? பரபரப்பு தகவல்..!
அமைச்சர் பொன்முடி வீட்டில் கட்டு கட்டாக வெளிநாட்டு கரன்சி சிக்கியதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர் பொன்முடி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அமலாகத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
பொன்முடி மகன் வீட்டிலும் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் 70 லட்சம் அளவுக்கு கணக்கில் காட்டப்படாத இந்திய கரன்சியும் 10 லட்ச ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு கரன்சியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாகத்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்து உள்ளது.
இதுகுறித்து அமலாக்கத்துறை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில முக்கிய ஆவணங்கள் பொன்முடி வீட்டில் சிக்கியதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
