1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 ஜூலை 2023 (16:32 IST)

அமைச்சர் பொன்முடி வீட்டுக்கு வங்கி அதிகாரிகள் வருகை: பணப் பரிவர்த்தனை குறித்து விசாரணையா?

Ponmudi
அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் சற்றுமுன் பொன்முடி வீட்டிற்கு வாங்கி அதிகாரிகள் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.  
 
அமைச்சர் பொன்முடி இல்லத்திற்கு வங்கி அதிகாரிகள் வந்திருப்பதாகவும் அவர்களிடம் பண பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
வங்கி அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பண பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்திய உடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.  
 
ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போதும் வங்கி அதிகாரிகள் வருகை தந்தனர் என்பதும் அப்போதும் பண பரிவர்த்தனை குறித்து விசாரணை செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
 
Edited by Mahendran