போலி சாவி தயாரித்து பீரோவை திறந்தார்களா அமலாக்கத்துறை அதிகாரிகள்.. பொன்முடி வீட்டில் பரபரப்பு..!
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை முதல் அமலாகத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் பொன்முடி வீட்டில் உள்ள பீரோ சாவி கிடைக்காததால் போலீஸ் சாவி தயாரித்து பீரோவை திறந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்த நிலையில் பீரோவை சோதனை செய்ய வேண்டும் அதன் சாவி வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது.
சாவி இல்லாததால் நீண்ட நேரம் அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அதன் பிறகு போலீஸ் சாவி தயாரிக்கும் நபரை வரவழைத்து பீரோவுக்கு போலி சாவியை தயாரித்து திறந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran