’அப்படியா.. எனக்கு தெரியாது’: பொன்முடி வீட்டின் சோதனை குறித்து துரைமுருகன் பதில்..!
அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் இது குறித்த பத்திரிகையாளரின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன் அது பற்றி எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தது குறித்து கருத்து தெரிவிக்க துரைமுருகன் மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் சோதனை நடைபெறுவது குறித்து எனக்கு தெரியாது என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
மேலும் இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கையா? என்ற கேள்விக்கு பதில் அளித்தஅவர் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே என்ற பாடலை அவர் பாடினார். மேலும் இதுவும் அரசியல் தான் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
Edited by Siva