திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 21 ஆகஸ்ட் 2019 (16:43 IST)

முதல்முறை அல்ல.. தினகரனை மீண்டும் துரத்திவிட்ட சசிகலா?

பெங்களூர் சிறைக்கு சென்ற டிடிவி தினகரனை சசிகலா சந்திக்க மறுத்தது இது இரண்டாவது முறை. 
 
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் இன்று சசிகலாவை சந்திக்க சென்ற தினகரன் அவரை சந்திக்காமல் திரும்பியுள்ளார்.  
 
ஆம், சிறை தரப்பில் தினகரனை திருப்பி அனுப்பியிருக்க வாய்ப்பு இருக்காது எனவும் கூறப்படுகிறது. ஒருவேளை சசிகலாவே தினகரனை சந்திக்க விருப்பம் இல்லை என்று திருப்பி அனுப்பி இருக்க வாய்ப்பு இருக்கிறதாக தெரிகிறது. 
டிடிவி தினகரனை சசிகலா சந்திக்காமல் திருப்பி அனுப்பியது இது முதல்முறை அல்ல இரண்டாவது முறை. இதற்கு முன்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு இரட்டை இலையை பெறுவதற்காக லஞ்சம் வழங்கிய வழக்கில் டிடிவி தினகரன் டெல்லி போலீஸ் பிடியில் சிக்கிய போதும் சசிகலா தினகரனை சந்திக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.