வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 21 ஆகஸ்ட் 2019 (09:08 IST)

”பாம்பின் கால் பாம்பு அறியும்”.. ஸ்டாலினை சீண்டிபார்க்கும் டிடிவி

வேலூர் மாவட்டத்தை பிரிப்பது தொடர்பான ஸ்டாலினின் கருத்துக்கு, பாம்பின் கால் பாம்பு அறியும் என பதிலளித்துள்ளார் டிடிவி தினகரன்.

ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனை எதிர்த்து பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லையில் உள்ள ஒண்டிவீரனின் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார்.

அப்போது இது குறித்து அவர் அளித்த பேட்டியில், பால் விலை உயர்வு என்பது ஏழை மக்களை பாதிக்ககூடியது. இதனை ஒரு போதும் ஏற்கமுடியாது. ஆதலால் உடனடியாக பால்விலை உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என கூறினார்.

மாவட்டத்தை பிரிப்பது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின், லஞ்சலாவண்யங்களை மறைக்கவே தமிழக அரசு இவ்வாறு செய்து வருகிறார்கள் என கருத்து தெரிவித்திருந்தார்.

ஸ்டாலினின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக டிடிவி தினகரன், ”மக்கள் விருப்பத்திற்கேற்ப மாவட்டத்தை பிரிப்பதால் அந்த மக்களுக்கு வளர்ச்சிதான் ஏற்படும். இதில் எந்த தவறுமில்லை, லஞ்சம், ஊழலை மறைக்கவே மாவட்டத்தை பிரிப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். அது பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல தான்” என கூறினார்.

இவ்வாறு முக ஸ்டாலினை பற்றி டிடிவி தினகரன் கருத்து தெரிவித்திருப்பது திமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.