1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TTV Dinkaran takes soul responsibly for election failure

தேர்தல் தோல்விக்கு காரணம் யார்? கண்டுபிடித்தாரா தினகரன்??

மக்களவை தேர்தல்
தேர்தல் தோல்விக்கான முழு பொறுப்பையும் தானே ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். 

 
திமுக, அதிமுக ஆகியக் கட்சிகளுக்கு மாற்றாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட அமமுக, மக்களவை மற்றும் இடைத்தேர்தல் தோல்விகளால் துவண்டு போயுள்ளது. 
 
ஏற்கனவே தங்களது முக்கிய நிர்வாகியான செந்தில் பாலாஜியை திமுக தாரைவார்த்தது போல இப்போது தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய முக்கிய நிர்வாகிகளை இழந்துள்ளது. 
 
இதனால் அமமுக அரசியல் ரீதியாக நெருக்கடியில் உள்ளது. மேலும் இன்னும் சில இரண்டாம் கட்டத் தலைவர்களும் அமமுகவை விட்டு விலகும் முனைப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதெல்லாம் பார்க்கையில் அமமுக சசிகலா ஜெயிலில் இருந்து வெளியில் வரும் வரைக்கூட தாக்குப்பிடிக்காது என நினைக்கத் தோன்றுகிறது. இதில் தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என்ற ஆலோசனையிலும் ஈடுப்பட்டார். 
 
இதனையடுத்து தற்போது அவர் அளித்துள்ள பேட்டி பின்வருமாறு, தேர்தல் தோல்விக்கான காரணம் வெளிவரும், யாரும் சோர்வடையத் தேவையில்லை. தேர்தலில் சிலர் பணியாற்றாததால் அமமுக தோல்வி அடைந்ததா என்பதை வரும் தேர்தலில் பார்ப்போம் என்று கூறியுள்ளார். 
அடுத்த கட்டுரையில்
மழையை பொருட்படுத்தாமல் குவிந்த 17 லட்சம் மக்கள்: தீவிரமடைந்தது ஹாங்காங் போராட்டம்