புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2019 (14:52 IST)

தினகரனை சந்திக்க மறுத்த சசிகலா? சிறை வளாகத்தில் பரபரப்பு!

தினகரனை சந்திக்க மறுத்த சசிகலா? சிறை வளாகத்தில் பரபரப்பு!
சசிகலாவை சந்திக்க சென்ற டிடிவி தினகரன் அவரை சந்திக்காமலே திரும்பி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் இன்று சசிகலாவை சந்திக்க சென்ற தினகரன் அவரை சந்திக்காமல் திரும்பியுள்ளார். 
 
ஆம், சசிகலாவை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் சசிகலாவை சிறையில் சந்திக்காமலேயே சென்னை திரும்பிவிட்டார் தினகரன். மேலும், சிறை தரப்பில் தினகரனை திருப்பி அனுப்பியிருக்க வாய்ப்பு இருக்காது எனவும் கூறப்படுகிறது. 
தினகரனை சந்திக்க மறுத்த சசிகலா? சிறை வளாகத்தில் பரபரப்பு!
ஒருவேளை சசிகலாவே தினகரனை சந்திக்க விருப்பம் இல்லை என்று திருப்பி அனுப்பி இருக்க வாய்ப்பு இருக்கிறதாக தெரிகிறது. மேலும், சசிகலாவின் உறவினர்கள் விவேக், அனுராதா, திவாகரன் ஆகியோர் தினகரன் குறித்து சில விஷயங்களை போட்டுகொடுப்பதால் சசிகலா தினகரன் மீது கோபத்தில் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.