1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. broiler chicken price will go high more

மீண்டும் உயரும் கறிக்கோழி விலை!.. பொதுமக்கள் அதிர்ச்சி...

broiler
உலகமெங்கும் உள்ள மக்களில் பெரும்பாலானோர் கோழி இறைச்சியை விரும்பி சாப்பிடுகிறார்கள். குறிப்பாக இந்தியாவில் கோழி இறைச்சி மிகவும் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. கோழி இறைச்சியில் புரோட்டின் அதிக அளவில் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வாரை விரும்பி சாப்பிடுகிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை பிராய்லர் கோழி, நாட்டுக்கோழி, பண்ணைக்கோழி ஆகியவை கிடைக்கின்றன. நாட்டுக்கோழி விலை 500 வரை இருப்பதால் பலரும் பிராய்லர் கோழியை வாங்க முன் வருகிறார்கள்.

ஆனால் கடந்த சில வருடங்களாகவே பிராய்லர் கோழியின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ 150 ரூபாய் இருந்த பிராய்லர் கோழியின் விலை படிப்படியாக உயர்ந்து 200 ரூபாயாக உயர்ந்தது. ஆனால் கோழி வளர்ப்பவர்களுக்கும் உற்பத்தி நிறுவனங்களுக்கும் இடையே சில பிரச்சனைகள் எழுந்ததால் கடந்த சில நாட்களாகவே பிராய்லர் கோழியின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. பொங்கலின் போது பிராய்லர் கோழி 260 முதல் 300 வரை விற்கப்பட்டது.

இந்நிலையில்தான் கோழி வளர்ப்பவர்களுக்கும் உற்பத்தினர்களுக்கும் இடையே இன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை சில காரணங்களால் அது ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சில ஊர்களில் பிராய்லர் கோழி இறைச்சி கிலோ 360 வரை விற்கப்படும் நிலையில் தற்போது அது மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது. இந்த செய்தி பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
குளிர்பான விளம்பரத்தில் நடிக்க இவ்வளவு கோடியா?!.. ஸ்கெட்ச் போட்ட அஜித்!...