அமைச்சர் உதயகுமார் அறையில் பறக்கும் படையினர் சோதனை: சென்னையில் பரபரப்பு!

Last Modified திங்கள், 15 ஏப்ரல் 2019 (07:55 IST)
தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஒருபக்கம் அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் பறக்கும் படை அதிகாரிகள் விடிய விடிய வாகனச்சோதனை செய்து கோடிக்கணக்கான பணத்தை கைப்பற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக அமைச்சர் உதயகுமார் அறையில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த சோதனையின்போது ஊடகங்கள் அனுமதிக்கப்படாததால் அமைச்சரின் அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்கள் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை.

அமைச்சரின் அறையில் பணப்பட்டுவாடாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கசிந்த தகவலை அடுத்து இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

மேலும் அமைச்சரின் அறை மட்டுமின்றி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் உள்ள ஒருசில எம்.எல்.ஏக்களின் அறைகளிலும் பறக்கும் படையினர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முயற்சிப்பதாக வெளிவந்த தகவலை அடுத்து இந்த சோதனை நடந்து வருவதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுஇதில் மேலும் படிக்கவும் :