திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 14 ஏப்ரல் 2019 (13:44 IST)

8 வழி சாலை திட்டத்த நிறைவேத்தியே தீருவோம்: மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு

சேலம் - சென்னை 8 வழி சாலை திட்டத்தை அமல்படுத்தியே தீருவோம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு அறிவித்த சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்காக பொதுமக்களிடம் இருந்தும் விவசாயிகளிடம் இருந்தும் தமிழக அரசு நிலம் கைப்பற்றியது செல்லாது என்றும், எட்டு வாரங்களில் கையகப்படுத்திய நிலங்களை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பை சமீபத்தில் வழங்கியது. கண்டிப்பாக இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் என கூறினார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
 
இத்திட்டத்தை முதலில் இருந்தே ஆதரித்து வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் அரசியலுக்காக சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்து நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம் என்று கூறினார்.
அவர் கூறுவது பொய் என நிரூபிக்கும் வகையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 8 வழி சாலை திட்டத்தை அமல்படுத்தியே தீருவோம், இதற்காக நிலம் கையகப்படுத்தும் விசயாயிகளுக்கு அதிகப்படியான இழப்பீட்டை தருவோம். விவசாயிகளிடம் இந்த திட்டத்தின் பலன்களை எடுத்து சொல்லி திட்டத்தை கண்டிப்பாக அமல் படுத்துவோம் என கூறினார்.
 
ஏற்கனவே இதே போல் நீட் விவகாரத்தில் அதிமுகவும் மத்திய அரசும் மாறி மாறி டிராமா ஆடி வரும் வேலையில் அதேபோல் 8 வழி சாலை திட்டத்திலும் பாஜக அதிமுகவின் இந்த மாறுபட்ட கருத்துக்கள் மக்களை கொந்தளிப்படைய செய்துள்ளது.