வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Modified: வியாழன், 11 ஏப்ரல் 2019 (11:25 IST)

ஸ்டாலினுக்கு கிடைத்த முதல் வெற்றி ! அமைச்சர் கோரிக்கை நிராகரிப்பு : நீதிமன்றம் அதிரடி

தேர்தல் பிரசாரத்தில் ஆளுங்கட்சியினர் எதிர்கட்சியினர் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக்கொள்வது வாடிக்கைதான். எனவே அமைச்சர் எஸ்பி வேலுமணி பற்றி ஸ்டாலின் பேச தடையில்லை என்று கூறி, உள்ளாட்சிதுறை அமைச்சர் வேலுமணியின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை நீதிமன்றம்.
தேர்தல் பிரசாரத்தின் போது பொள்ளாச்சி பாலியல் வழக்கை என்னுடன் தொடர்புபடுத்தி பேசிவருவதாகவும் , தன் மீது வீணாக உள்ளாட்சித்துறை ஊழல் பழி சுமத்துவதாகவும் அதனால் தனக்கு அவப்பெயர் ஏற்படுவதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் எஸ்பி வேலுமணி ஸ்டாலின் மீது அவதூறு மற்றும் மேலும் ரூ. 1 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு தொடர்ந்திருந்தார்.
 
உள்ளாட்சித்துறை ஊழல் மற்றும் பொள்ளாச்சி சம்பவம் குறித்து ஸ்டாலின் பேச தடைவிதிக்க வேண்டும் என்று அமைச்சர் வழக்கு தொடுத்தார்.
 
இந்நிலையில் இதுகுறித்து நீதிமன்றம் கூறியுள்ளதாவது :
 
தேர்தல் பிரசாரத்தில் ஆளுங்கட்சியினர் எதிர்கட்சியினர் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக்கொள்வது வாடிக்கைதான். எனவே அமைச்சர் எஸ்பி வேலுமணி பற்றி ஸ்டாலின் பேச தடையில்லை என்று கூறி, உள்ளாட்சிதுறை அமைச்சர் வேலுமணியின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை நீதிமன்றம். பொள்ளாச்சி சம்பவம் மற்றும் உள்ளாட்சித்துறை ஊழல் பற்றி பேச ஸ்டாலினுக்குத் தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புத்தெரிவித்துள்ளது.