வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: வியாழன், 11 ஏப்ரல் 2019 (11:16 IST)

நாகப்பாம்பு டான்ஸ் ஆடிய நாகராஜ் அமைச்சர்: ருசிகர சம்பவம்!!

கர்நாடகாவில் பாம்பு டான்ஸ் ஆடி அமைச்சர் ஒருவர் வாக்கு சேகரித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
 
கர்நாடகாவில் வரும் ஏப்ரல் 18 மற்றும் ஏப்ரல் 23 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களை கவர வேட்பாளர்களும் அவர்களுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு வரும் அமைச்சர்கள், கட்சி பிரமுகர்கள் வித்தியாச விதியாசமான செயல்களை செய்து வருகின்றனர்.
 
அப்படி கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வீட்டு வசதித்துறை அமைச்சர்எம்.டி.பி. நாகராஜ்(67) சிக்கபல்லபுரா வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பாம்பு நடனம் ஆடிக்கொண்டே வாக்கு சேகரித்தார். தேர்தல் நெருங்குவதும் போதும் இந்த அரசியல்வாதிகளின் அக்கப்போருக்கு அளவே இல்லை என மக்கள் புலம்புகின்றனர். நாட்டிலேயே இவர் தான் பணக்கார எம்எல்ஏ என சொல்லப்படுகிறது.