1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Flooding in roads of T Nagar

வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை!

கனமழை
சென்னையில் உள்ள சில பகுதிகளில் காலை சிறிது நேரம் பெய்த மழைக்கு தி.நகர் சாலைகளில் வெள்ளம் ஓடுகிறது. 

 
வடகிழக்கு பருவமழையால் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் மழை பெய்தது. மேலும் அடுத்த இரண்டு நாட்களில் சென்னையில் உள்ள சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் காலை சிறிது நேரம் பெய்த மழைக்கு தி.நகர் சாலைகளில் வெள்ளம் ஓடுகிறது. இருப்பினும் பணிக்கு செல்லுபவர்கள் வடியாத தண்ணீரில் நடந்து வேலைக்கு செல்கின்றனர். தண்ணீர் தேங்கியுள்ள தி நகர் சாலைகளின் புகைப்படங்கள் இதோ... 
About Writer
Sugapriya Prakash