1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Flight services starts from Chennai from August 30

ஐபிஎல் போட்டி எதிரொலி: சென்னையில் இருந்து சர்வதேச விமானங்கள் இயக்கம்

சென்னை
ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் 7 சர்வதேச விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் இதற்கு மத்திய அரசும் அனுமதி அளித்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சிறிய அளவில் மீண்டும் சர்வதேச விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தொடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக துபாய், அபுதாபி, ஷார்ஜாவுக்கு விமான போக்குவரத்து நிறுவனங்கள் தங்கள் பயண திட்டத்தை வெளியிட்டுள்ளன. ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் 7 விமானங்களை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
சமீபத்தில் கொரோனா வைரஸ் நெகட்டிவ் சான்றுடன் வருபவர்களை 7 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்ததை அடுத்து தற்போது விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இதுவரை வந்தே பாரத் விமானங்கள் மட்டுமே பெங்களூர் கொச்சி போன்ற நகரங்களில் இயக்கப்பட்டு வந்தது சென்னை விமான நிலையத்தில் எந்த விதமான விமான போக்குவரத்து இல்லாத நிலையில் தற்போது மீண்டும் நான்கு மாதங்களுக்குப் பின்னர் விமான போக்குவரத்து நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
அடுத்த கட்டுரையில்
ஓய்வுக்கு பின் தோனி வாழ்க்கை சிறப்புற அமைய வாழ்த்துகிறேன்: முக ஸ்டாலின்