1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Fishers strike to codemn srilanka arrest tamil fishers

தொடர்ந்து கைது செய்யப்படும் மீனவர்கள்! – ராமேஸ்வரத்தில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்!

Tamilnadu
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வங்க கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்கதையாக இருந்து வருகிறது. சமீபத்தில் ராமேஸ்வரம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நாளை ராமேஸ்வரம் பேருந்து நிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று முதல் மீனவ அமைப்புகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டுள்ளன.
அடுத்த கட்டுரையில்
சைவ உணவு மட்டுமே... அரசு பேருந்து நின்று செல்லும் மோட்டல்களுக்கு நிபந்தனை!