செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Updated : வியாழன், 10 ஜூன் 2021 (22:00 IST)

சாட்டிலைட் போன் சந்தா உயர்வு: மீனவர்கள் கவலை

சாட்டிலைட் போன் விலையை பிஎஸ்என்எல் நிறுவனம் உயர்த்தி உள்ளதால் மீனவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் 
 
ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மீனவர்கள் பாதுகாப்பிற்கு சாட்டிலைட் போன் பயன்படுத்தப்படுகிறது. இந்த போனை பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த போனுக்காக மாத சந்தா ரூபாய் 1481 இதுவரை கட்டப்பட்டுக் கொண்டிருந்த கொண்டிருந்த மீனவர்கள் தற்போது திடீரென 3441 கட்டவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த திடீர் அறிவிப்பு மீனவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளதாகவும் திடீரென சாட்டிலைட் போன் மாத சந்தாவை இந்த அளவுக்கு உயர்த்தி இருப்பதால் தங்களது வாழ்வாதாரம் சிக்கலில் இருப்பதாகவும் மீனவர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது