மீன் பிடி தடைகாலத்தை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க வேண்டும்… மீனவர்கள் கோரிக்கை!
ராமநாதபுரத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் மீனவர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் மீனவர்கள் தங்கள் கோரிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
மீன்களின் இனப்பெருக்கத்துக்காக விடுக்கப்பட்ட 61 நாள் மீன்பிடி தடைக்காலம் ஜூன் 14 ஆம் தேதியோடு முடிகிறது. ஆனால் இந்த நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படகுகளை ரிப்பேர் செய்ய முடியவில்லை என்றும் அதனால் தடைகாலத்தை இன்னும் 2 வாரங்கள் அதிகப்படுத்தி 1 ஆம் தேதி முதல் கடலுக்கு செல்லும்விதமாக அரசு அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். மேலும் மான்ய விலையில் தரும் டீசலை 1800 லிட்டரில் இருந்து 4000 லிட்டராக தரும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.