ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (16:03 IST)

எத்தனை உயிர் போனதோ... 12 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்வு.

 
சாத்தூர் அருகே அச்சங்குலத்தில் தனியாருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை செயல்படுகிறது. இந்நிலையில் பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தின் காரணமாக ஆலையில் பணிபுரிந்த 7 மற்றும் பள்ளி மாணவி ஒருவர் என 8 பேர் உயிரிழந்தனர். 
 
இத்தகவலறிந்த சாத்தூர் மற்றும் ஏழாயிரம் பண்னை தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படுகாயமடைந்தவர்களை சாத்தூர் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இவ்வெடிவிபத்து குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர் முதல் கட்டமாக உரிமையாளர் மாரியப்பபை கைது செய்துள்ளனர். இந்நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின் படி சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாம்.