தொடர்புடைய செய்திகள்
- வெடித்த பட்டாசுக் குழல்களைச் சேகரித்து, மரவெடிகள்… கமல்ஹாசன் டுவீட்
- சென்னையில் அனுமதி நேரத்தைத் தாண்டி பட்டாசு வெடித்த 348 பேர் கைது!
- தடை மீறி வெடிக்கப்பட்ட பட்டாசுகள்: மூச்சு விட சிரமப்படும் மக்கள்!
- பட்டாசு வெடித்த தகராறில் கணவன் மனைவி வெட்டிக்கொலை – ஈரோட்டில் பரபரப்பு!
- தெலங்கானாவில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு!
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து - 8 பேர் பலி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து, பள்ளி மாணவி உட்பட 8 பேர் உயிரிழப்பு.
சாத்தூர் அருகே அச்சங்குலத்தில் தனியாருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை செயல்படுகிறது. இந்நிலையில் பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தின் காரணமாக ஆலையில் பணிபுரிந்த 7 மற்றும் பள்ளி மாணவி ஒருவர் என 8 பேர் உயிரிழந்தனர்.
இத்தகவலறிந்த சாத்தூர் மற்றும் ஏழாயிரம் பண்னை தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படுகாயமடைந்தவர்களை சாத்தூர் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இவ்வெடிவிபத்து குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர் முதல் கட்டமாக உரிமையாளர் மாரியப்பபை கைது செய்துள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் விருதுநகர் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் பெருமாள் ஆய்வு செய்து வருகிறார்.
