தொடர்புடைய செய்திகள்
- இன்று 7 மாவட்டங்களில் மழை கொட்டும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
- சென்னை - நெல்லை வந்தே பாரத்.. அடுத்த வாரம் திங்கட்கிழமை வரை ஹவுஸ்புல்..!
- சென்னை-நெல்லை மட்டுமல்ல, இன்று ஒரே நாளில் 9 வந்தே பாரத் ரயில் துவக்கம்..!
- சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்: துரை வைகோ அறிவிப்பு..!
- ஹம்சாஃபர் விரைவு ரயிலில் தீ விபத்து...
சென்னை போத்தீஸ் ஜவுளிக்கடை குடோனில் தீ விபத்து: பெரும் பரபரப்பு..!
சென்னை உள்பட தமிழகத்தின் பல நகரங்களில் ஜவுளி கடை வைத்திருக்கும் போத்தீஸ் நிறுவனத்தின் சென்னை தி.நகர் கிளையில் உள்ள குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தியாகராய நகரில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடையின் குடோனில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதாகவும் சம்பவம் இடத்திற்கு விரைந்த தீயணைப்புதுறையினர் போராடி தீயை அணைத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
தற்போது வந்துள்ள தகவலின் படி தீ முற்றிலும் அணைக்கப்பட்டதாகவும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணைகள் தெரிய வந்துள்ளது. இந்த தீ விபத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
