திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 26 அக்டோபர் 2023 (13:10 IST)

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்: முதல் தகவல் அறிக்கை வெளியீடு

governor malikai
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
 
கருக்கா வினோத் 2 பெட்ரோல் பாட்டிலை ஆளுநர் மாளிகை முன்பு தூக்கி வீசினார் என்று முதல் தகவல் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுக்க வந்த காவலர் மீதும் பெட்ரோல் குண்டினை வீசிவிடுவதாக கருக்கா வினோத் மிரட்டினார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
 
மேலும் கிண்டி காவல் நிலைய தலைமைக்காவலர் மோகன் அளித்த புகாரின் பேரில் 5 பிரிவுகளில் கைது செய்யப்பட்ட வினோத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
முதல் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் நுழைவு வாயில் எண்.1 முன் பலத்த சத்தத்துடன் விழுந்து தீப்பற்றி எரிந்தது என்றும், ஆளுநர் மாளிகை பிரதான நுழைவு வாயிலை நோக்கி 2 பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் தீப்பற்ற வைத்து வீசப்பட்டது என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran