ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2023 (16:00 IST)

பிரபல மாலிற்கு வெடிகுண்டு மிரட்டல்.... போலீஸார் சோதனை

vizhupuram
விழுப்புரத்தில் உள்ள பிரபல மாலிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரபல வணிக வளாகத்திறு இன்று தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒரு மர்ம நபர் இந்த மாலிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டார்.

இந்த வணிக வளாகத்தில் 4 மாடி உள்ள  நிலையில், 3 தியேட்டர், துணிக்கடை உள்ளிட்டவை இயங்கி வருகிறது.

ஒரு மணி நேரத்திற்கு முன்பு இந்த மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த மாலிற்கு வந்து உள்ளிருந்த 1000 பேரை வெளியேற்றி, மெட்டர் டிரெக்க்டர் மற்றும் மோப்ப நாய் கொண்டு போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மாலில் இருந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நெரிசலின்றி பத்திரமாக வேறிடத்திற்கு மாற்றப்பட்டனர்.