1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 26 அக்டோபர் 2023 (07:54 IST)

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு.. கைதான வினோத் சிறையில் அடைப்பு.!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைதான கருக்கா வினோத் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளடு.
 
கருக்கா வினோத்துக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் என நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து  புழல் சிறையில் அடைக்கப்பட்டார். நள்ளிரவு 1.30க்கு வினோத்தை புழல் சிறையில் அடைக்க போலீசார் சென்றனர்.
 
காலையில் வருமாறு சிறை அதிகாரிகள் கூறியதால், பலத்த பாதுகாப்புடன் சிறை வாசலில் அதிகாரிகள் காத்திருந்ததாகவும், விடிய விடிய சிறைக்கு வெளியே காத்திருந்து, அதிகாலை 6.15 மணிக்கு கருக்கா வினோத் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
 
இந்த நிலையில் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசவில்லை, சர்தார் பட்டேல் சாலையில்தான் வீசினார், ஆளுநர் மாளிகைக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் இல்லை, பிடிபட்ட வினோத் மீது 7 வழக்குகள் உள்ளது என்று சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva