1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 7 அக்டோபர் 2023 (14:11 IST)

வெடிகுண்டை வைத்து விளையாடிய சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்

bihar
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான  ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு சிறுவர்கள் பந்து என  நினைத்து வெடிகுண்டு வைத்து விளையாடி அது வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு பொருள் பந்து போன்று இருந்ததால், அதை எடுத்து சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக அது வெடித்தது. இதில், 4 சிறுவர்கள் காயமடைந்தனர். ஒருவர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வெடிகுண்டு என தெரியாமல், பந்து வடிவிலான அதை விளையாடியபோது, அது தரையில் விழுந்து வெடித்துள்ளது. இதுபற்றி போலீஸார் விசாரித்து வருகின்ரனர்.