வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By

ஒரு பாட்டில் சாராயத்திற்காக மைனர் மகளை வாடகைக்கு விட்ட தந்தை

கேரளாவில் மதுவுக்கு அடிமையான ஒருவர் தன்னுடைய மைனர் மகளை ரூ.300க்கு ஒரு இரவு முழுவதும் வாடகைக்கு விட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் மதுவுக்கு அடிமையாகியுள்ளார். இந்த நிலையில் அவர் தனது மைனர் மகளை 24 வயது இளைஞர் ஒருவரிடம் இரவு முழுவதும் ரூ.300க்கு வாடகைக்கு விட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தந்தையையும் மைனர் சிறுமியை வாடகைக்கு எடுத்த இளைஞரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து இரண்டு நபர்களை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஒரே ஓரு பாட்டில் சாராயத்திற்காக பெற்ற மகளை விபச்சாரத்திற்கு தள்ளிய கல்மனது கொண்ட தந்தைக்கு மாநிலம் முழுவதிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. இதுபோன்ற நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கேரள அரசை பெண்கள் அமைப்பு ஒன்று வலியுறுத்தியுள்ளது.