1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: ஞாயிறு, 10 நவம்பர் 2019 (14:00 IST)

சட்டமும் சனநாயகமும் *ஒரு* சார்புடையதாக மாறிக்கொண்டே போனால் எப்படி ? - இயக்குநர் ரஞ்சித் டுவீட்

தமிழ் சினிமாவில் உள்ள மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பா. ரஞ்சித். சமீபத்தில், இவர், மன்னர் ராஜராஜ சோழனுக்கு எதிராக கருத்துகள் தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.  அது தமிழகத்தில் பெரும் பேசுபொருளானது.
இந்நிலையில், இன்று,பா.ரஞ்சித்  தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் ஒரு பதிவிட்டுள்ளார் :
 
அதில், "ஒவ்வொரு நாளும் சட்டமும் சனநாயகமும் *ஒரு* சார்புடையதாக
மாறிக்கொண்டே போனால்... தீர்ப்புகள் அதிகாரத்தின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்றால்...  “சட்டத்தின் முன் எப்படி எல்லோரும் சமம்??" என்று தெரிவித்துள்ளார்.