சூர்யா-சிறுத்தை சிவா படம் என்ன ஆச்சு?

Last Modified வெள்ளி, 11 அக்டோபர் 2019 (21:08 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்கும் உள்ளதாக இன்று காலை அதிகாரபூர்வமான செய்திகள் வெளியானது. இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்
ஆனால் அதே நேரத்தில் சூர்யாவின் ரசிகர்கள் இந்த அறிவிப்பால் மிகவும் வருத்தத்திற்கு உள்ளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா தற்போது சூரரைப்போற்று என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கூட ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது திடீரென அவர் ரஜினி படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுவதால் சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரஜினி பட வாய்ப்பு வந்தவுடன் சூர்யா படத்தை தள்ளிவைத்து விட்டு ரஜினி படத்தை இயக்க சிறுத்தை சிவா சென்று விட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன

இதற்கு முன்பும் இதேபோல் சூர்யாவின் படம் ஒன்றை பா.ரஞ்சித் இயக்கவிருந்த நிலையில் திடீரென ரஜினியின் கபாலி பட வாய்ப்பு கிடைத்ததும் சூர்யாவை அம்போவென விட்டுவிட்டு பா.ரஞ்சித் சென்று விட்டார் என்பதும், இன்று வரை சூர்யா-பா ரஞ்சித் திரைப்படம் உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ரஜினி பட வாய்ப்பு கிடைத்தால் சூர்யாவையும் சிவா மறந்தவிட்டதாகவும், மீண்டும் அவர் சூர்யாவுடன் சேருவாரா என்று என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :