செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 23 அக்டோபர் 2021 (09:00 IST)

தமிழகத்தில் 3வது அலை வராது என கூற இயலாது - பீதி கிளப்பும் ராதாகிருஷ்ணன்

தமிழக மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணன் மூன்றாவது அலை வராது என கூற முடியாது என குறிப்பிட்டுள்ளார். 

 
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசு கடந்த சில வாரங்களாக மெகா தடுப்பூசி மையங்களை அமைத்து வருகிறது என்பது தெரிந்ததே. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு வந்த இந்த மெகா தடுப்பூசி மையம் இந்த வாரம் சனிக்கிழமை நடத்தப்பட உள்ளது. 
 
இதனிடையே இது குறித்து கண்காணித்த தமிழக மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் இதுவரை கொரோனா மூன்றாவது அலைக்கான அறிகுறி இல்லை. இதனால் மூன்றாவது அலை வராது என கூற முடியாது. வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் சிலவற்றில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.