செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (12:48 IST)

அடுத்த இரண்டு மாதங்கள் சவாலானதாக இருக்கும்: சுகாதார செயலாளர்!

தமிழகத்தில் அடுத்த 2 மாதங்கள் சவாலானதாக இருக்கும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தாலும் டெங்கு காய்ச்சல் மற்றும் மழை காலங்களில் ஏற்படும் நோய்கள் குறித்த அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது 
 
இந்த நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் சுகாதாரத்துறைக்கு அடுத்த இரண்டு மாதங்கள் சவாலானதாக இருக்கும் என்றும் கொரோனா மற்றும் மழை காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுபடுத்த தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
இதனையடுத்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் தங்களது மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரத் துறையுடன் இணைந்து ஒத்துழைப்பு கொடுத்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியுள்ளார். இந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.