வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 25 ஜனவரி 2023 (16:56 IST)

முகநூலில் காதல்.. 62 வயது மதபோதகரை மணந்த 45 வயது பெண்: குடும்பத்தினர் ஆத்திரம்

facebook love
முகநூல் மூலம் காதலித்து 45 வயது பெண்ணை 62 வயது மத போதகர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த மத போதகர் ஒருவர் முகநூல் மூலம் அதே பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவரை காதலித்து உள்ளார். இதனை அடுத்து இரு வீட்டிற்கும் தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. 
 
இந்த நிலையில் நேற்று இரவு மனைவிக்கு உணவு வாங்க மதபோதகர் வெளியே சென்று இருந்த போது பெண்ணின் குடும்பத்தினர் திடீரென வீட்டிற்குள் புகுந்து பெண்ணை ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்தனர் 
 
அதன் பிறகு வெளிக்கதவையும் பூட்டி விட்டதால் மத போதகர் அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். காவல்துறையினர் விரைந்து வந்து குடும்பத்தினரை சமாதானப்படுத்தி இந்த பிரச்சனையை நீதிமன்றம் மூலம் தீர்த்துக் கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 
Edited by Siva