இரங்கல் கடிதம் கூட இந்தியில்... கடுப்பான பொன்னையன்!

Sugapriya Prakash| Last Modified வியாழன், 15 அக்டோபர் 2020 (15:51 IST)
மைய அரசு மொழி திணிப்பில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கருத்து.

 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் காலமான நிலையில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர் என்பது தெரிந்ததே. இந்நிலையில் முதல்வர் தாயார் மறைவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் கடிதம் ஒன்றை அனுப்பினார். இந்த இரங்கல் கடிதம் இந்தியில் இருந்தது. 
 
இந்நிலையில் இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன்,  அமித்ஷாவின் தாய்மொழி இந்தி இல்லை, ஆனாலும் அவர் இந்தியில் கடிதம் எழுதுகிறார் என்றால் எப்படிப்பட்ட வெறிச்செயலில் தற்போதுள்ள மைய அரசு மொழி திணிப்பில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது என்பதற்கு அதுவே எடுத்துக்காட்டு என குறிப்பிட்டுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :