பாஜகவுக்கு சேவகம் செய்யும் அடிமை அதிமுக - உதயநிதி காட்டம்!

Sugapriya Prakash| Last Modified வியாழன், 15 அக்டோபர் 2020 (09:59 IST)
மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று  தமிழக அரசு வலியுறுத்தவில்லை என்பதால் உதயநிதி காட்டமான பதிவு.
 
ஆம், MBBS- BDS -மருத்துவ மேற்படிப்பில் BC-MBC மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று  தமிழக அரசு வலியுறுத்தவில்லை. அடிமைகளின் துரோகத்தை  உச்ச நீதிமன்றத்தில் இப்படி அம்பலப்படுத்தியுள்ளார் மத்திய அரசின் Solicitor General துஷார் மேத்தா. 
 
அடிக்கும் கொள்ளைக்கு சிக்கல் வரக்கூடாது என பாஜகவுக்கு சேவகம் செய்யும் அடிமை அதிமுகவின் இட ஒதுக்கீட்டு வேஷம் கலைந்தது. மருத்துவ இட ஒதுக்கீடு, அண்ணா பல்கலைக்கழக இட ஒதுக்கீடு என எல்லாவற்றையும் சிக்கலில் தள்ளி சமூகநீதிக்கு சவக்குழி பறிக்கும் அதிமுக-பாஜக துரோகத்தை தமிழகம் மன்னிக்காது என உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அதிமுக அரசை விமர்சித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :