1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 27 ஏப்ரல் 2024 (11:42 IST)

அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை..! இபிஎஸ் குற்றச்சாட்டு..!!

edapadi
அதிமுக ஆட்சியிலும் கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
 
சேலத்தில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தலை எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம்,  தமிழகத்திற்கு புயல் நிவாரண நிதி குறைவாக மத்திய அரசு ஒதுக்கியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
 
அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என புகார் தெரிவித்த அவர், எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியே மத்திய அரசு அளிக்கும் என்று கடுமையாக சாடினார்.
 
மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்டபோதும் நிதியை குறைத்து தான் வழங்கினார்கள் என்றும் திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்த போதும்கூட தமிழகத்திற்கு தேவையான நிவாரணம் கிடைக்கவில்லை என்றும் எடப்பாடி தெரிவித்தார்.
 
தமிழகத்தில் போதைப் பொருளால் சமுதாயம் மிக மோசமான அழிவுக்கு சென்று கொண்டிருக்கிறது என்றும் போதைப்பொருள் விவகாரத்தில் இரும்பு கரம் கொண்டு அடக்காமல் அரசு அலட்சியம் காட்டுகிறது என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.