1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 27 ஏப்ரல் 2024 (10:50 IST)

தமிழகத்திற்கு மழை வெள்ள நிவாரண நிதி.. மத்திய அரசு அறிவித்தது எத்தனை கோடி தெரியுமா?

flood vilage
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழை வெள்ளத்துக்கான நிவாரண நிதியை மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களிலும் அதன் பின்னர் சில வாரங்களில் நெல்லை உள்பட நான்கு மாவட்டங்களிலும் கன மழை பெய்ததால் பெரும் வெள்ளம் ஏற்பட்டு சேதம் ஏற்பட்டது என்பது மக்களின் பல பொருள்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக நிவாரணம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் மாநில அரசு பலமுறை கேட்டும் மத்திய அரசு தரவில்லை என ஆளும் கட்சி தரப்பிலிருந்து குற்றம் சாட்டப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது தமிழகத்திற்கு மழை நிவாரணமாக ரூ.276  கோடி மத்திய அரசு அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், டிசம்பர் மழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் என மொத்தம் தமிழகத்திற்கு ரூ.276 கோடி நிவாரணமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran