1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (17:29 IST)

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: அரசியல் கட்சிகளுக்கான சின்னம் அறிவிப்பு

symbol
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: அரசியல் கட்சிகளுக்கான சின்னம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் நான்கு அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. 
 
திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் , அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தேமுதிக ஆகிய அரசியல் கட்சிகள் போட்டியிடும் நிலையில் இந்த நான்கு கட்சிகளுக்குமான சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 
 
திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இளங்கோவனுக்கு கைச்சின்னம், அதிமுகவின் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம், தேமுதிகவின் ஆனந்திற்கு முரசு சின்னம் மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு எந்த விட பிரச்சனையும் இல்லை என்பது அக்கட்சியின் தொண்டர்களுக்கு திருப்தியை அளித்துள்ளது.
 
Edited by Mahendran