செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (11:41 IST)

எழுதாத பேனாவுக்கு நினைவுச்சின்னம் தேவையா? பிரேமலதா விஜயகாந்த்

Premalatha
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் நடுக்கடலில் பேனா சிலை வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு ஒரு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இது குறித்து கருத்து கூறிய போது ’எழுதாத பேனாவுக்கு நினைவுச் சின்னம் வைப்பது என்பது தேவையில்லாதது என்றும் அதுவும் கடலில் வைப்பது தேவையில்லாதது என்றும் தெரிவித்துள்ளார். 
 
மேலும் இடைத்தேர்தல் என்பது ஜனநாயகமா? அல்லது பணநாயகமா? அது எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது என்றும் திருச்சியில் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார். 
 
வரும் பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் வேட்பாளர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran