வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (11:36 IST)

நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடனான கூட்டணி தொடருமா ? எடப்பாடி பழனிசாமி பதில்!

Edappadi
ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக உடனான கூட்டணியை அதிமுக தொடரும் நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும் தொடருமா என்ற கேள்விக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதில் சொல்லியுள்ளார். 
 
இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் ஆன கூட்டணி தொடரும் என்றும் இப்போது பாஜக எங்கள் கூட்டணியில் தான் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். இருப்பினும் அந்தந்த சூழலுக்கு ஏற்ப கூட்டணி இருக்கும் என்றும் அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மேலும் கடந்த 21 மாதங்களாக திமுக ஆட்சி மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றும் மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்றும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் கொடுக்கவில்லை என்றும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கவில்லை என்றும் அவர் திமுக அரசை குற்றம் சாட்டினார்.
 
 
Edited by Mahendran