திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (15:48 IST)

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள்: தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

Election
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என தேர்தல் நடத்தும் அதிகாரி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 
 
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி மற்றும் தேமுதிக நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது. மேலும் சுயேச்சைகளும் போட்டியிடுகின்றனர். 
 
இந்த நிலையில் வேட்பு மனு பரிசீலனை இன்று முடிவடைந்த நிலையில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என தேர்தல் நடக்கும் அதிகாரி தெரிவித்துள்ளார். 77 வேட்பாளர்கள் மற்றும் நோட்டா என 78 பெயர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்த வேண்டிய நிலை இருப்பதால் ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு 16 வேட்பாளர்கள் என்ற கணக்கின்படி 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva