1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Erode construction shops got fire

ஈரோட்டில் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த கடைகள்! – பல லட்சம் பொருட்கள் சேதம்!

Tamilnadu
ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள கடைகள் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள சத்தி ரோடு பகுதியில் கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. நேற்று நள்ளிரவு திடீரென அந்த கடைகளில் ஒன்றான பெயிண்ட் விற்கும் கடை திடீரென தீப்பிடித்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் தீ அருகிலிருந்த மற்ற கடைகளுக்கும் பரவியுள்ளது. இதனால் விடிய விடிய தீ பற்றி எரிந்த நிலையில் பல மணி நேர முயற்சிக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள கட்டுமான பொருட்கள் எரிந்து சாம்பலான நிலையில் தீ பற்றியதற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
80 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு; 34 பேருக்கு ஒமிக்ரான்! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!