ஜனவரி 3 முதல் 15-18 வயதினர்களுக்கு தடுப்பூசி: பிரதமர் மோடி அறிவிப்பு!
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வரும் நிலையில் இந்தியாவில் உள்ள மத்திய சுகாதாரத்துறை மற்றும் மாநில அரசுகளின் சுகாதாரத்துறை தடுப்பூசி செலுத்துவதன் காட்டிய வேகம் காரணமாக படிப்படியாக கொரனோ வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் நாடு முழுவதும் பரவி வருவதை அடுத்து கூடுதல் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடையே உரையாடியபோது 15 முதல் 18 வயது உடையோருக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனவரி 10 முதல் கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது