அதிமுக வேட்பாளராக பாஜக எம்.எல்.ஏ மருமகன்.. ஆள் கிடைக்காததால் அவசர வேட்பாளரா?
அதிமுக வலுவாக இருக்கும் கொங்கு பகுதியிலேயே போட்டியிடுவதற்கு ஆள் கிடைக்கவில்லை என்பதால் பாஜக எம்எல்ஏ மருமகனை அதிமுக வேட்பாளராக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
அதிமுக போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்று நேற்றும் இன்றும் வெளியான நிலையில் இதில் ஈரோடு தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பாளராக ஆற்றல் அசோக்குமார் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்
இவர் தற்போது மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இவர் பாஜகவுக்காக தீவிரமாக பணியாற்றி வந்தார் என்பதும் சமீபத்தில் தான் இவர் அதிமுகவில் இணைந்த நிலையில் அவருக்கு தற்போது ஈரோடு தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது
ஈரோடு தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைத்தால் ஒரு பைசா கூட கட்சி செலவு செய்ய வேண்டாம் என்றும் நானே முழு செலவையும் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியதால் தான் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran