வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 மார்ச் 2024 (11:25 IST)

அதிமுக வேட்பாளர்களின் 2ஆம் கட்ட பட்டியல்: யார் யார் போட்டி..!

admk office
மக்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களின் 2ஆம் கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன் விபரம் இதோ:
 
மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக நேற்று வெளியிட்ட நிலையில் சற்று முன் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது
 
இதன்படி ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரேம்குமார், வேலூர் தொகுதியில் பசுபதி, திருப்பூர் தொகுதியில் அருணாச்சலம், நீலகிரி தொகுதியில் லோகேஷ் தமிழ்செல்வன், கோவை தொகுதியில் சிங்கை ராமச்சந்திரன், நெல்லை தொகுதிகள் சிம்லா முத்துச்சோழன், திருச்சி தொகுதியில் கருப்பையா, பெரம்பலூர் தொகுதியில் சந்திரமோகன், கள்ளக்குறிச்சி தொகுதியில் குமரகுரு, தர்மபுரி தொகுதியில் அசோகன், புதுச்சேரியில் தமிழ்வேந்தன், திருவண்ணாமலை தொகுதியில் கலியபெருமாள், மயிலாடுதுறை தொகுதியில் பாபு, சிவகங்கை தொகுதியில் சேகர் தாஸ் மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் கார்த்திகேயன் ஆகியோர் போட்டியிடப் போவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 
 
மேற்கண்ட இரண்டு கட்ட வேட்பாளர்களும் இன்னும் ஒரு சில நாட்களில் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran