வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 22 ஜூன் 2022 (19:48 IST)

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய மனு தள்ளுபடி

ADMK
அதிமுக போது குழுவுக்கு தடை கோரிய மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் நாளை நடைபெற இருந்தது. இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பிலிருந்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
 
இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் இன்று காலை முதல் நடந்த நிலையில் மாலை தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் சற்று முன் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கப்பட்டதாகவும் இந்த தீர்ப்பில் அதிமுக பொதுக்குழு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது
 
எனவே நாளை திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என தெரிகிறது.