1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 22 ஜூன் 2022 (18:31 IST)

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு வரவேற்பு பேனர்கள் கிழிப்பு: பெரும் பரபரப்பு

banner
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு வரவேற்பு பேனர்கள் கிழிப்பு: பெரும் பரபரப்பு
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாளை அதிமுகவின் பொதுக்குழு நடக்க இருக்கும் நிலையில் அந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனை மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் நாளை சென்னை வானகரத்தில் பொதுக்குழு நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழுவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் ஒற்றை தலைமையாக ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
ஆனால் அதே நேரத்தில் இந்த பொதுக்குழுவை தடுத்த நிறுத்த ஒபிஎஸ் தரப்பினர் போராடி வருகிறது. இந்த நிலையில் நாளை பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில் இன்று சென்னை வானகரத்தில் உள்ள அதிமுக பொதுக்குழு வரவேற்பு பேனர்கள் கிழித்து பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது