1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 23 ஜூன் 2022 (07:58 IST)

ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவான தீர்ப்பு: இனிப்பு வழங்கி கொண்டாடும் அதிமுக தொண்டர்கள்!

ops
அதிமுக பொதுக்குழு கூடுவது குறித்த வழக்கில் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதை அடுத்து ஓபிஎஸ் தரப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாடிய சம்பவம் நடந்து உள்ளது.
 
பொதுக்குழுவில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள 23 தீர்மானங்கள் தவிர தனி தீர்மானங்கள் நிறைவேற்ற கூடாது நேற்று நீதிபதிகள் தடை விதித்தனர்
 
எனவே ஒற்றை தலைமை குறித்த தீர்மானத்தை இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற முடியாது என தெரிய வந்துள்ளது
 
இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததை அடுத்து ஓபிஎஸ் தரப்பில் உள்ள அதிமுக தொண்டர்கள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி இந்த தீர்ப்பை உற்சாகமாக கொண்டாடி உள்ளனர்