அதிமுக கூட்டத்தில் நான்கு முக்கிய தீர்மானங்கள் - பீதியில் தினகரன் ஆதரவாளர்கள்
அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதிமுகவின் உள்ள உட்கட்சி பிரச்சனைகள் பரபரப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைமை அலுவகத்தில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்குபெறும் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கீனார். முதல்வர் எடப்படி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் முடிவில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு விரைவில் கூட்டப்படும்
தினகரன், சசிகலா கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்க முடிவு.
சசிகலா நியமித்த நியமனங்கள் செல்லாது. அதேபோல், அவரால் நியமிக்கப்பட்ட தினகரனின் நியமனங்கள் எதுவும் செல்லாது.
நமது எம்.ஜி.ஆர், ஜெயா தொலைக்காட்சி ஆகியவற்றை தினகரன் தரப்பிடம் இருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
என நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மொத்தமாக சசிகலா மற்றும் தினகரன் தரப்பிற்கு செக் வைத்துள்ள இந்த தீர்மானங்கள் அவர்களின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.