திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 7 அக்டோபர் 2022 (18:39 IST)

தமிழக சட்டப்பேரவை கூடுவது எப்போது? சபாநாயகர் அப்பாவு தகவல்

appavu
தமிழக சட்டசபை அக்டோபர் 17ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழக சட்டசபை அக்டோபர் 17-ஆம் தேதி காலை 10 மணிக்கு கூடும் என சட்டமன்ற சபாநாயகர் அப்பவு அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் அக்டோபர் 17ஆம் தேதி காலை 10 மணிக்கு கூடும் சட்டப்பேரவை எத்தனை நாள் கூடும் என்பதை அலுவலகத்தில் ஆய்வு செய்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த கூட்டத்தொடரில் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். 
 
அதிமுக விவகாரம் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிமுக கொறடா அளித்த கடிதம் தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் ஓபிஎஸ், பழனிச்சாமி ஆகிய இருவரும் முதல்வராக இருந்த வர்கள் என்பதால் சட்டப்பேரவையில் இந்த பிரச்சனை குறித்து கண்ணியமாக நடந்து கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 

Edited by Siva