178 தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து: மாநில அரசின் அதிரடி நடவடிக்கை!
உத்தர பிரதேசத்தில் விதிகளை மீறி செயல்பட்டதாக புகார் எழுந்த 178 தனியார் மருத்துவமனைகளின் உரிமங்களை மாநில அரசு ரத்து செய்துள்ளது.
இது குறித்து சட்டசபையில் விளக்கமளித்த துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதக், பெறப்பட்ட சுமார் 500 புகார்களின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். ரத்து செய்யப்பட்ட மருத்துவமனைகளில் 59 நிறுவனங்கள் உரிய விசாரணைக்கு பின் மீண்டும் உரிமம் பெற்றுள்ளன. மேலும், விதிமீறலில் ஈடுபட்ட 281 மருத்துவமனைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் மொத்தம் 533 மருத்துவமனைகள் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளன . தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் அதிகப்படியான கட்டணங்களை கட்டுப்படுத்த தற்போதைய நிலையில் அரசிடம் எந்த தனிப்பட்ட கொள்கையும் இல்லை என்றும், இருப்பினும் அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விதிகளை மதிக்காத மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை தொடரும் எனவும் அவர் எச்சரித்தார்.
Edited by Siva