திமுக கவுன்சிலர் மீது அதிமுக ஆதரவாளர்கள் தாக்குதல்...போலீஸார் விசாரணை
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் இன்று நகர்மறக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டம் நிறைவடைந்த பின், கள்ளக் குறிச்சி, 17 வார்டு திமுக கவுன்சிலரான ஞானவேல் என்பவரை, அதிமுக கன்சிலர், அதிமுக நகரச் செயலாளர் பாபு மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்கினர்.
இந்தத் தாக்குதலில் திமுக கவுன்சிலர் ஞானவேலின் சட்டை கிழிந்து உடலில் ரத்தம் வழிந்தது. இதுகுறித்து திமுகவின் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
அதில், சில நாட்களுக்கு முன், திமுக கவுன்சிலர் ஞானவேல், அதிமுக கவுன்சிலர் பாபுவின் தபி ராஜாவின் மனைவியை( 5வது வார்டு திமுக கவுன்சிலர்) திட்டி மிரட்டல் விடுத்த நிலையில், இதற்காக ஞானவேல் இன்று பாபுவின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
Edited by Sinoj